திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 3 மே 2023 (19:04 IST)

இயக்குனர் மனோபாலா உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி

vijay
நடிகர் மனோபாலாவின் மறைவுக்கு நடிகர் விஜய் நேரில் சென்று  அஞ்சலி செலுத்தினார்.

தமிழ் சினிமாவில் இயக்குனர் பாரதி ராஜாவிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர் மனோபாலா. அதன்பின்னர், 1982 ஆம் ஆண்டு ஆகாய கங்கை என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

அதன்பின்னர், பிள்ளை நிலா, ஊர்க்காவலன், என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான் உள்ளிட்ட 24 படங்களை இயக்கியுள்ளார்.

நடிப்பில் கவனம் செலுத்திய மனோபாலா சுமார் 700 படங்களுக்கு மேல் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

சில நாட்களாக கல்லீரல் பிரச்சனை காரணமாக சாலிகிராமத்தில் உள்ல அவரது வீட்டிலிருந்தபடி சிகிச்சை பெற்று வந்த  நிலையில், இன்று உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 69.

அவரது மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், தற்போது நடிகர் விஜய் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.