1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: புதன், 3 மே 2023 (13:29 IST)

இயக்குநரும், நகைச்சுவை நடிகருமான மனோபாலா காலமானார்: திரையுலகம் அதிர்ச்சி..!

பிரபல நகைச்சுவை நடிகர் மற்றும் இயக்குனர் மனோபாலா திடீரென சற்றுமுன் காலமானதாக வெளியாகி இருக்கும் செய்தி திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த 80களில் இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகம் ஆகி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் மனோபாலா. ரஜினிகாந்த் நடித்த ஊர்க்காவலன் உள்பட பல திரைப்படங்களை இவர் இயக்கி உள்ளார் என்பதும் அதேபோல் சுமார் 1000 திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் இவர் இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல் நல குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மனோபாலா சற்றுமுன் சிகிச்சையின் பலன் இன்றி காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த மனவாலாவுக்கு வயது 69.
 
Edited by Siva