வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 11 ஜூலை 2019 (15:23 IST)

பிகில் விஜய்க்கு தந்தை இந்த பிரபலமா! - லேட்டஸ்ட் அப்டேட்டால் குஷியான விஜய் ரசிகர்கள்!

பிகில் படத்தில் விஜய்க்கு தந்தையாக பிரபல கால்பந்து வீரர் நடித்துள்ளதாக தற்போதைய தகவல் கிடைத்துள்ளது. 


 
தமிழ் சினிமாவின் தலையாய நடிகர் தளபதி விஜய்யின் பிகில் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் , செகண்ட் லுக் போஸ்டர் என அடுத்தடுத்து வெளிவந்து விஜய் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது. 
 
மைக்கேல் என்ற கதாபாத்திரத்தில் கால்பந்தாட்ட வீரராக மகன் விஜய், மற்றும் ராயப்பன் என்ற அப்பா கதாபாத்திரத்தில் மற்றொரு விஜய் என இரட்டை வேடங்ககளில் விஜய் நடிக்கும் பிகில்  படத்தின் அப்டேட்டுகளை படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி சமீபத்தில் வெளியிட்டிருந்தார். 
 
விஜய் பிறந்த நாளில் இந்த இரண்டு போஸ்டர்களை சமூகவலைகளங்களில் அதிக அளவில் ஷேர் செய்து விஜய் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். தற்போது கிடைத்துள்ள தகவலை என்னவென்றால், பிகில் படத்தில் விஜயின் தந்தை கதாபாத்திரத்தில் முன்னாள் இந்திய கால்பந்து வீரர் விஜயன் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 


 
கேரளா மாநிலம் திரிச்சூரைச் சேர்ந்த  மணி விஜயன் என்ற இவர் 2003-ம் ஆண்டு அர்ஜூனா விருது பெற்றுள்ளதோடு,  கால்பந்து போட்டிகளில் பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார். மேலும் இவர் விஷாலுடன் திமிரு படத்திலும் கொம்பன், கணேசா மீண்டும் சந்திப்போம், கெத்து உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.