1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 13 ஜூலை 2023 (08:46 IST)

விஜய்யின் 70 ஆவது படத்தை இயக்குகிறாரா ஷங்கர்?

நடிகர் விஜய் இப்போது லோகேஷ் இயக்கத்தில் லியோ படத்தின் ஷூட்டிங்கை முடித்துள்ளார். அடுத்து அவர் வெங்கட்பிரபு இயக்கும் அவரின் 68 ஆவது படத்தில் நடிக்க உள்ளார். இந்த இரு படங்களுக்குப் பிறகு விஜய் அரசியலுக்கு செல்ல உள்ளதால் சினிமாவில் இருந்து ஒரு பிரேக் எடுத்துக்கொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால் அந்த தகவலில் உண்மை இல்லை என்றும் சொல்லப்படுகிறது. விஜய் இப்போது தன்னுடைய சினிமா கேரியரின் உச்ச ஃபார்மில் இருக்கிறார். இந்நிலையில் விஜய் இயக்குனர் ஷங்கரோடு மீண்டும் ஒரு படத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெங்கட்பிரபு இயக்கும் படத்துக்கு பிறகு அட்லி படத்தில் நடிக்கும் விஜய், அதன் பின்னர் தன்னுடைய 70 ஆவது படத்தில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஷங்கர் இப்போது இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் ஆகிய படங்களை இயக்கி வருகிறார். இந்த இரு படங்களையும் முடித்த பின்னர் அவர் விஜய் படத்தை இயக்குவார் என சொல்லப்படுகிறது.