1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 12 ஜூலை 2023 (19:46 IST)

விஜய் உடன் இணையும் ஷங்கர்- ''முதல்வன்'' பட பாணியின் புதிய படம்!

vijay -shankar
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் ஷங்கர். இவர், ஜென்டில்மேன், காதலன், இந்தியன், முதல்வன், ஜீன்ஸ், அந்நியன், சிவாஜி, எந்திரன், 2.0  ஆகிய சூப்பர் ஹிட் படங்களை  இயக்கியுள்ளார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு  நடிகர் விஜய் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் நண்பன். இப்படம் இந்தியில் வெளியான  3 இடியட்ஸ் என்ற படத்தின் ரீமேக் ஆகும்.

இப்படத்தில்  நடிகர் விஜய் மற்றும் ஷங்கர் முதன் முதலாக இணைந்து பணியாற்றினர்.

இந்த நிலையில், தற்போது ஷங்கர் ராம்சரண் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்ற படத்தையும், கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படத்தையும் இயக்கி வருகிறார்.

இப்படத்தை அடுத்து, முதல்வன் பாணியில் ஷங்கர்  நடிகர் விஜய்யின் 70 வது படத்தை இயக்கவுள்ளதாகவும், இதுபற்றி ஷங்கர் கூறிய கதை விஜய்க்குப் பிடித்துள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.