1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 29 செப்டம்பர் 2023 (07:35 IST)

பாடல் காட்சியோடு தொடங்கும் விஜய்யின் அடுத்த பட ஷூட்டிங்!

பிகில் படத்துக்குப் பிறகு விஜய், ஏஜிஎஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை  வெங்கட் பிரபு இயக்க  உள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்துக்கான திரைக்கதை அமைக்கும் வேலைகள் இப்போது நடந்து வருகின்றன. படத்தைப் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகாமல் ரகசியமாக வைத்துள்ளனர். இந்த படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் தற்போது நடந்து வரும் நிலையில் அக்டோபர் 2 ஆம் தேதி இந்த படத்தின் பூஜை நடக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் அதற்கடுத்த நாள் முதல் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. முதலில் ஒரு பாடல் காட்சியை படமாக்க இயக்குனர் வெங்கட்பிரபு முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.