செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Updated : வியாழன், 28 செப்டம்பர் 2023 (18:50 IST)

தளபதி விஜய்யின் ‘லியோ’.. இரண்டாவத் சிங்கிள் பாடல் ரிலீஸ்..!

தளபதி விஜய் நடிப்பில் அனிருத் இசையில் லோகேஷ் கனகராஜ்  இயக்கத்தில் உருவான லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. 
 
இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற இரண்டாவது சிங்கிள் பாடலான Badass என்ற பாடல் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 
 
இந்த பாடலை அனிருத் கம்போஸ் செய்து பாடியுள்ளார் என்பதும் இந்த பாடலை விஷ்ணு எடவன் என்பவர் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மாஸ் ஆன வரிகளுடன் இருக்கும் இந்த பாடல் அனிருத் இசையில் , குரலில் கேட்பதற்கே அட்டகாசமாக இருக்கிறது என்றும் இந்த பாடல் நிச்சயம் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran