1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 28 செப்டம்பர் 2023 (14:22 IST)

“எங்க ஊருக்கு வாங்க… ஆடியோ ரிலீஸ் நடத்தலாம்..”- அழைப்பு விடுக்கும் விநியோகஸ்தர்?

இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமாக அமைந்துள்ளது விஜய் நடித்துள்ள லியோ. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, லலித்குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா என ஏகப்பட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.  படத்தின் ரன்னிங் டைம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. படம் 2 மணிநேரம் 39 நிமிடங்கள் ஓடும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா திட்டமிடப்பட்டு இருந்த நிலையில் திடீரென நடத்தப் போவதில்லை என தயாரிப்பு நிறுவனம் அறித்தது. அதற்கு பல்வேறு காரணங்கள் பல தரப்பினரால் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தை கேரளாவில் வெளியிடும் கோகுலம் கோபாலன் எனும் விநியோகஸ்தர் கேரளாவில் ஆடியோ ரிலீஸ் நடத்தலாம் என லியோ படக்குழுவினருக்கு அழைப்பு விடுத்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இது உண்மையா என்பது பற்றிய அதிகாரப்பூர்வ செய்திகள் ஒன்றும் வெளியாகவில்லை.