வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : புதன், 6 மார்ச் 2019 (14:51 IST)

விஜய் 63 புதிய ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ லீக்! விஜய் கெட்டப் ?

தெறி, மெர்சல் படத்தை அடுத்து மூன்றாவது முறையாக விஜய் - அட்லீ கூட்டணியில்  தளபதி 63 படம் உருவாகி வருகிறது.


 
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் நடிகர் விஜய் மைக்கேல் என்ற கதாபாத்திரத்தில் கால்பந்தாட்ட பயிற்சியாளாக  நடிக்க அவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார். 
 
இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் உள்ள பின்னி மில்லில் தொடங்கி படு மும்மரமாக நடந்து வருகிறது. தற்போது இரண்டாம்கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும், அடிக்கடி படப்பிடிப்பு தளத்திலிருந்து போட்டோக்களும் வீடியோக்களும் வெளியாகி வைரலாகிவருகிறது. 
 
அந்தவகையில், சமீபத்தில் தளபதி 63 படத்தின்  படபிடிப்பு தளத்தில் இருந்து நடிகர் விஜய் ரசிகர்களுக்கு கை காண்பித்து கெத்தாக நடந்து வருகிறார்.  தற்போது இந்த வீடியோ ரசிகர்களால் பகிரப்பட்டு வைரலாக பரவி வருகிறது.