வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 6 மார்ச் 2019 (13:15 IST)

விஜய் பெற்றோருடன் செல்ஃபி எடுத்த சூர்யா ! வைரல் புகைப்படம் இதோ!

தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னன் விஜய்யின் பெற்றோருடன் நடிகர் சூர்யா செல்ஃபீ எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.


 
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் சூர்யா, சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் தளபதி விஜய்யின் பெற்றோரான எஸ். வி. சந்திரசேகர் மற்றும் ஷோபா சந்திரசேகருடன் செல்ஃபி எடுத்துகொண்டார். 
 
காப்பான் கெட்டப்பில் இவ்விழாவில் கலந்துகொண்ட சூர்யாவின் புகைப்படம் இணையத்தில் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது. நடிகர் சூர்யா மற்றும் விஜய் சேர்ந்து நடித்த நேருக்கு நேர், பிரண்ட்ஸ் போன்ற படங்கள் இன்றளவும் ரசிர்களால் பேசப்படு வருவதோடு நிஜ வாழ்விலும் தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பராகவே நடிகர் சூர்யா திகழ்ந்து வருகிறார்.