திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 10 ஜூன் 2022 (13:25 IST)

திருப்பதி கோவிலுக்கு 4 கிலோ தங்கநகை காணிக்கையாக கொடுத்த சென்னை பெண்!

tirupathi
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்னையை சேர்ந்த பெண் பக்தர் ஒருவர் இரண்டு கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான 4 கிலோ 150 கிராம் தங்க வைர நகைகளை நன்கொடையாக வழங்கியுள்ளார்
 
சென்னையை சேர்ந்த சூரியநாராயணன் - சரோஜா தம்பதியர் தங்களது குடும்பத்தினருடன் நேற்று திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அதன் பின்னர் அந்த தம்பதிகள் தாங்கள் கொண்டு வந்திருந்த 4 கிலோ 150 கிராம் எடை கொண்ட தங்க மற்றும் வைர கற்களால் அலங்கரிக்கப்பட்ட காசுமாலை மற்றும் செயினை ஏழுமலையானுக்கு காணிக்கையாக வழங்கினர்
 
இதனை திருமலை திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் பெற்றுக்கொண்டார். பின்னர் அவர்களுக்கு ஏழுமலையானின் தீர்த்தம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இந்த ஆபரணங்கள் விரைவில் மூலவருக்கு சமர்ப்பிக்கப்படும் என தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது