தடைகளை தகர்த்து ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நயன்தாரா படம்

Last Modified வியாழன், 18 ஜூலை 2019 (22:43 IST)
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'கொலையுதிர் காலம்' திரைப்படம் கடந்த மாதம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென இந்த படத்தின் டைட்டில் குறித்த வழக்கு ஒன்று நீதிமன்றத்திற்கு வந்தது. இதனை அடுத்து இந்த படத்தின் ரிலீசுக்கு நீதிமன்றம் தடை செய்ததை அடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டது
இந்த நிலையில் நீதிமன்றம் தற்போது இந்த படத்தை ரிலீஸ் செய்ய அனுமதித்துள்ளதை அடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஜூலை 26 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் இந்திப் பதிப்பான 'காமோஷி' திரைப்படம் ஏற்கனவே கடந்த மாதம் பாலிவுட்டில் வெளியாகி படுதோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நயன்தாராவுக்காக தமிழகத்தில் ஒரு பெரிய ரசிகர் கூட்டம் இருப்பதால் இந்த படம் தமிழில் தோல்வி அடைய வாய்ப்பு இல்லை என அவரது ரசிகர்கள் கோரிவருகின்றனர்
உன்னைப்போல் ஒருவன், பில்லா 2' ஆகிய படங்களை இயக்கிய சக்ரி டோலட்டி இயக்கிய இந்தப் படத்தில் பூமிகா சாவ்லா, பிரதாப்போத்தன் உள்பட பலர் நடித்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :