1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 31 மே 2022 (16:11 IST)

நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம்… ரஜினி, அஜித்துக்கு அழைப்பு?

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் விரைவில் சென்னையில் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் திருப்பதியில் நடைபெற இருப்பதாகவும் அங்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியானது. ஆனால் சமீபத்தில் பிரபல இணையதளம் ஒன்று நயன்தாரா திருமணம் குறித்த அழைப்பிதழ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் மகாபலிபுரத்தில் நடக்க உள்ளதாக அறிவுக்கப்பட்டு இருந்தது.  மேலும் இந்த திருமணத்திற்கு நயன்தாரா மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திருமணத்தில் திரையுலகைச் சேர்ந்த வெகு சிலருக்கே அழைப்பிதழ் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதில் அஜித்தின் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதால் அவருக்கு அழைப்பிதழ் வைக்கப்பட்டுள்ளதாகவும், அதே போல ரஜினிக்கும் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.