வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: சனி, 17 ஜூன் 2023 (19:15 IST)

பாவம் மனுஷன் நிலைமை இப்படி ஆகிப்போச்சே.... சினிமாவை விட்டு சின்னத்திரையில் விக்னேஷ் சிவன்!

தமிழ் சினிமாவின் தற்போதைய ஸ்டார் நடிகையான நயன்தாரா நானும் ரவுடி தான் படத்தில் நடித்த போதில் இருந்து அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்தார். அதன் பிறகு சுமார் 8 ஆண்டுகள் காதல் பயணத்தை திருமண வாழ்க்கையாக மாற்றிக்கொண்டார்கள். இவர்கள் கோலிவுட்டின் சிறந்த ஜோடியாக வளம் வந்தனர். 
 
திருமணத்திற்கு பின்னரும் இருவரும் தங்களது கெரியரில் தொடர்ந்து கவனத்தை செலுத்தி வருகிறார்கள். நயன்தாரா வாடகை தாய் முறையில் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றார். அதன் பின் நயன் - விக்கி இருவரும் தனது குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக முழு நேரத்தை செலவிட்டதால் படங்களில் பெரிதாக கவனம் செலுத்த தவறிவிட்டார்கள். 
 
இதனால் இருவரும் சில தோல்விகளை சந்தித்தனர். விக்னேஷ் சிவன் அஜித் படத்தில் இருந்து விலக்கப்பட்டது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், அதை அவர்கள் பாசிட்டிவ் ஆக மட்டுமே எடுத்துக்கொண்டு வாழ்க்கையில் முன்னேறி செல்வதற்கான வழிகளை தேடி வருகிறார்கள். ஆனால் விக்னேஷ் சிவனுக்கு படம் இயக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 
 
இதனால் சும்மா நேரத்தை வீணடிக்கக்கூடாது என கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தும் வகையில் தற்போது சின்னத்திரையில் நுழைந்துள்ளாராம். ஆம்,  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காபி வித் டிடி போன்று இருக்கும் என்று கூறப்படுகிறது. 
 
பெரும்பாலும் பிரபலங்களை வைத்து பேட்டி எடுப்பார் என கூறப்படுகிறது. நயன்தாரா மனைவி, மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் என புகழ் பெட்ரா விக்னேஷ் சிவனுக்கே இப்படி ஒரு நிலைமையா? என ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். ஆனால், விக்னேஷ் சிவனின் இந்த பாசிட்டிவான முடிவை பலர் பாராட்டியுள்ளனர்.