மரண படுக்கையில் இருந்த ரோபோ சங்கருக்கு உதவியது இந்த பிரபலம் இவர் தானாம்!
தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் ஒருவர் ரோபோ சங்கர். பல முன்னணி நடிகர்களோடு நடித்து, தற்போது பிரபலமாக உள்ள ரோபோசங்கர், ஆரம்பத்தில் மிமிக்ரி கலைஞராக தனது பயணத்தைத் தொடங்கினார். தற்போது திரைப்படங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தோன்றி வருகிறார்.
நல்ல அஜானுபாகுவான தோற்றம் கொண்ட ரோபோ சங்கர் சமீபகாலமாக உடல் எடை மிகவும் குறைந்து ஒல்லியாக மாறியுள்ளார். அவருக்கு மஞ்சள் காமாலை வந்து கல்லீரல் பாதிக்கப்பட்டதே காரணம் என சொல்லப்பட்டது. ஆனால் அதிகாரப்பூர்வமாக அவர் தரப்பில் இருந்து எதுவும் வெளியிடப்படவில்லை.
அவரே உடல்நலப் பாதிப்பு குறித்து யுட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில், என்னிடம் சில தவறான பழக்கங்கள் இருந்தது. அதனால் மஞ்சள் காமாலை ஏற்பட்டு உடல் எடை குறைந்தது. தற்போது அந்த பழக்கங்களை நிறைத்துவிட்டேன் என்றும் நீங்களும் அதை நிறுத்திக்கொள்ளுங்கள். குடும்பம் , நண்பர்கள் , உடற்பயிற்சி , ஆராக்கியமான உணவுமுறை , அன்பை பரிமாறிதல் என சந்தோசமாக வாழுங்கள். உடலை கெடுத்து கொள்ளும் அளவுக்கு கெட்ட பழக்கங்களை தவிருங்கள் என கூறியிருந்தார்.
இந்நிலையில் ரோபோ ஷங்கர் நோயால் பாதிக்கப்பட்டு மிகவும் சிரமப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தபோது தற்கொலை செய்துகொண்டு இறந்துவிடலாம் என முடிவெடுத்துவிட்டாராம். அப்போது தான் நக்கீரன் கோபால் அவரை சந்தித்து சரியான சிகிச்சைக்கு வழிகாட்டி ஒரு மருத்துவமனையில் சேர்த்தாராம். அங்கு தான் அவர் உயிர் பிழைத்ததாகவும், நக்கீரன் கோபால் மட்டும் வரவில்லை என்றால் நான் உயிரோடவே இருந்திருக்கமாட்டேன் என பேட்டி ஒன்றில் உருக்கமாக கூறியுள்ளார்.