1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 27 ஜனவரி 2023 (07:45 IST)

விஜய் சேதுபதியுடன் வெற்றிமாறன்.. விடுதலை படத்தின் அடுத்த முக்கிய அப்டேட்

விடுதலை திரைப்படம் முதலில் ஒரு பாகமாக உருவாக்கப்பட்ட நிலையில் இப்போது அதை இரண்டு பாகங்களாக்கியுள்ளார் வெற்றிமாறன்.

கடந்த ஆண்டே தொடங்கப்பட்ட விடுதலை இந்த படத்தை முதலில் சிறு பட்ஜெட்டில் குறுகிய காலத்தில் எடுத்து முடிப்பதாகவே திட்டமிடப்பட்டது. ஆனால் படத்தில் விஜய் சேதுபதி இணைந்ததும் படத்தின் பட்ஜெட் அதிகமாகி ஏராளமான நட்சத்திரங்களை நடிக்க வைத்தனர்.

ஆனால் அனைவரும் பிஸியான நடிகர்களாக இருப்பதால், அவர்களின் தேதிகளைப் பெறுவதில் சிக்கல் எழுந்தது. இந்நிலையில் படம் இரண்டு பாகங்களாக ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஷுட்டிங் முடிந்து தற்போது பின் தயாரிப்பு வேலைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் படத்தின் டப்பிங் தற்போது தொடங்கியுள்ளது. படத்தில் விஜய் சேதுபதி தன்னுடைய காட்சிகளுக்கான டப்பிங்கை பேசத்தொடங்கியுள்ள நிலையில் அது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகின்றன.