வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 29 மார்ச் 2023 (15:53 IST)

இளையராஜா வாய்ப்புக் கொடுத்தும் ஏற்க மறுத்த நடிகை… இதுதான் காரணமா?

கடந்த ஆண்டே ரிலீஸ் ஆகி இருக்க வேண்டிய  விடுதலை படம் மார்ச் இறுதியில் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. படத்தை முதலில் 4 கோடி ரூபாயில் சிறு பட்ஜெட்டில் குறுகிய காலத்தில் எடுத்து முடிப்பதாகவே திட்டமிடப்பட்டது. ஆனால் படத்தில் விஜய் சேதுபதி இணைந்ததும் படத்தின் பட்ஜெட் 40 கோடி ரூபாய்க்கும் மேல் அதிகமாகி ஏராளமான நட்சத்திரங்களை நடிக்க வைத்தனர். இந்நிலையில் ஷுட்டிங் முடிந்து தற்போது பின் தயாரிப்பு வேலைகள் நடந்து வருகின்றன. படத்தின் டப்பிங் சமீபத்தில் நடந்து முடிந்தன. படத்தின் பாடல்கள் மற்றும் இசை வெளியீடு சமீபத்தில் நடந்தது. இதையடுத்து படம் மார்ச் 31 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் ஜி வி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ. இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவரான அவரை விடுதலை படத்தில் ஒரு பாடலை பாட வாய்ப்புக் கொடுத்தாராம் இளையராஜா. ஆனால் தனக்கு போதுமான இசை அறிவுக் கிடையாது என்பதால் அந்த வாய்ப்பை வேண்டாம் என்று மறுத்துவிட்டாராம் பவானி ஸ்ரீ.