வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 12 டிசம்பர் 2023 (07:10 IST)

இமயமலையில் நிர்வாண வாழ்க்கை… நூடுல்ஸ் சமையல்- சர்ச்சையில் சிக்கிய வித்யுத் ஜமால்!

பாலிவுட் நடிகரான வில்லன் நடிகர் வித்யுத் ஜமால் தனது கட்டுக்கோப்பான உடலாலும் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளாலும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். மேலும் களரிபயட்டு எனும் மார்ஷியல் ஆர்ட்ஸ் கலையில் தேர்ச்சி பெற்றவராக இருந்து வருகிறார்.  தமிழில் இவர் பில்லா 2, துப்பாக்கி மற்றும் அஞ்சான் ஆகிய படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு அறிந்த நடிகராக உள்ளார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் தனது சமூகவலைதளப் பக்கத்தில் இமயமலை அடர்காடுகளில் தான் நிர்வாணமாக இருக்கும் சில புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். அதில் “வருடத்தில் 10 நாட்கள் இமயமலையில் கழிப்பது என் வாழ்வின் அங்கமாகிவிட்டது” எனக் கூறியிருந்தார்.

அவர் வெளியிட்டிருந்த புகைப்படங்களில் காட்டுப்பகுதியில் தீ மூட்டி நூடுல்ஸ் சமைப்பது போன்ற ஒரு புகைப்படமும் இருக்க, அது இப்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதையடுத்து ரசிகர்கள் “காட்டுப்பகுதிகளில் தீ மூட்டக் கூடாது” என்பது தெரியாதா  எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் சிலர் தனியாக இமயமலைக்கு சென்றதாக சொல்லும் நீங்கள் போட்டோகிராபரையும் அழைத்து சென்றீர்களா என கேள்வி எழுப்பியுள்ளனர்.