வெள்ளி, 13 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 22 அக்டோபர் 2024 (14:20 IST)

சூர்யா 45 படத்தில் நடிக்கும் இரண்டு முன்னணி நடிகைகள்… டைட்டில் இதுவா?

’தீரன் அதிகாரம் ஒன்று’, ’கைதி’, ’சுல்தான்’, மற்றும் ‘என் ஜி கே’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்த டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் அடுத்து சூர்யா நடிப்பில் ஆர் ஜே பாலாஜி இயக்கும் படத்தைத் தயாரிக்கவுள்ளது. இந்த படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

மிகக் குறுகிய கால படமாக உருவாகி வரும் இந்த படத்தின் ஷூட்டிங் கங்குவா ரிலீஸான பின்னர் டிசம்பர் மாதம் தொடங்கவுள்ளது. படம் ஏப்ரல் மாதம் ரிலீஸாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் மிருனாள் தாக்கூர் மற்றும் ருக்மினி வசந்த் ஆகிய இருவரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.  ருக்மினி வசந்த் சிவகார்த்திகேயன் நடிப்பில் முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படத்துக்கு ‘கருப்பு’ என்று பெயர் வைக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் போஸ்டர் மற்றும் தலைப்பை வைத்துப் பார்க்கும் போது அமானுஷ்ய விஷயங்களைப் பற்றி பேசும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.