வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 23 மார்ச் 2023 (08:50 IST)

பத்து தல படத்தில் ரஜினி நடிக்க மறுத்தது இதனால்தான்… தயாரிப்பாளர் சொன்ன தகவல்!

பல இழுபறிகளுக்கு பிறகு சிம்பு நடிக்கும் பத்து தல திரைப்படம் ரிலீஸ் கட்டத்தை நெருங்கியுள்ளது. மார்ச் மாதம் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆடியோ வெளியீடு வரும் மார்ச் 18 ஆம் தேதி நடக்க உள்ளது. சமீபத்தில் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடந்தது. அதில் படத்தின் நாயகன் சிம்பு உள்ளிட்ட அனைவரும் கலந்துகொண்டனர்.

இந்த படத்தின் மாற்றப்பட்ட திரைக்கதையில் ஏ ஜி ஆர் என்ற கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார். ஆனால் முதலில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ரஜினியைதான் தயாரிப்பு நிறுவனம் அனுகியதாம். ஆனால் ரீமேக் படம் என்பதால் ரஜினி ஒத்துக்கொள்ளவில்லை என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியுள்ளார். இந்த படத்தின் ஒரிஜினல் வெர்ஷனில் சிம்பு நடித்துள்ள கதாபாத்திரத்தில் சிவராஜ் சிவகுமார் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.