வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 13 நவம்பர் 2024 (11:27 IST)

அமரன் சர்ச்சை: முகுந்த் போர் குற்றவாளின்னு நான் சொல்லல.. இயக்குனர் அப்படி காட்டியிருக்கார்! - திருமுருகன் காந்தி விளக்கம்!

Thirumurugan Gandhi

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் குறித்து மே 17 இயக்கம் திருமுருகன் காந்தி பேசியது சர்ச்சையான நிலையில் அதுகுறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.

 

 

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான படம் ‘அமரன்’. இந்த படம் மறைந்த இந்திய ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இதில் இடம்பெறும் ராஜ்புத் ரைபிள்ஸ் படைப்பிரிவு குறித்து மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி பல விமர்சனங்களை முன் வைத்திருந்தார். காஷ்மீர் மக்களின் பிரச்சினைகளை படம் பேசவில்லை என குற்றம் சாட்டினார்.

 

இந்நிலையில் அவர் முகுந்த் வரதராஜன் நிராயுதபாணியான நபர் ஒருவரை சுடுவதாக படத்தில் காட்டியிருப்பதன் மூலம் அவர் ஒரு போர்குற்றவாளி என பேசியதாக தகவல்கள் பரவியது. ஆனால் அதை திருமுருகன் காந்தி மறுத்துள்ளார்.

 

இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் “'அமரன்' திரைப்படத்தின் ஒரு காட்சியில் ஆயுதமற்ற குற்றவாளி வில்லனை கைது செய்யாமல், 'இந்திய இராணுவத்தின் முகத்தை பார்'  என சொல்லி சுட்டுக்கொலை செய்வதாக சினிமா காட்சி அமைத்திருந்தார்கள்.

 

ஒரு ராணுவம் இப்படியாக ஆயுதமற்ற-காயமடைந்த எதிரியை கொல்லக் கூடாதென்பது இராணுவ சட்டங்களும், சர்வதேச சட்டங்களும் சொல்கின்றன. இதை மீறினால் போர்க்குற்றம் எனப்படும் குற்றச்சாட்டு சுமத்தப்படும், ஆகவே இப்படியான சினிமா காட்சி உண்மையானதா அல்லது சினிமாவிற்காக அமைக்கப்பட்டதா எனும் கேள்வியினை அமரன் திரைப்பட இயக்குனரை நோக்கி எழுப்பினோம். இதற்கு இயக்குனர் பதில் சொல்லாமல் நழுவிவிட்டார். காரணம்,'..முகுந்த் வரதராஜன் இப்படியாக சுடவில்லை, இது என்னுடைய  கற்பனை..' என இயக்குனர் சொன்னாரென்றால், முகுந்த் வரதராஜனை குற்றவாளியாக்கியது தான்தான் என பொறுப்பேற்க வேண்டும் என்பதால் அவர் பதில் பேசாமல் கடந்து சென்றுவிட்டார்” என்று கூறியுள்ளார்.

 

மேலும் அதை அப்படியே பாஜகவினர் திரித்து முகுந்த் வரதராஜனை தான் போர் குற்றவாளி என கூறியதாக போலியான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர் என கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K