வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: புதன், 8 நவம்பர் 2023 (11:08 IST)

மாயா கலீஜ், பூர்ணிமா ஸ்லோ பாய்சன்.. பட்டப்பெயர் வைத்த எவிக்சன் ஆன போட்டியாளர்..!

பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக இருக்கும் மாயா மற்றும் பூர்ணிமா குறித்து சமீபத்தில் எவிக்சன் ஆன யுகேந்திரன் ஒரே வார்த்தையில் விமர்சனம் செய்துள்ளார். 
 
மாயாவை கலீஜ் என்றும், பூர்ணிமாவை ஸ்லோ பாய்சன் என்றும், விஷ்ணு நம்ப தகாதவர் என்றும் கூறியுள்ளார். அதேபோல்  நிக்சன், ஜோவிகா, ஐஷு உள்ளிட்டோர்  தான் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். 
 
குறிப்பாக ஜோவிகா மிகவும் புத்திசாலித்தனமான பெண், 19 வயதிலேயே சமையல் உள்பட பல விஷயங்களை தெரிந்து வைத்திருக்கிறார் என்று பாராட்டிய யுகேந்திரன் அதே நேரத்தில்  மரியாதை கொடுக்க தெரியவில்லை என்று கூறினார். 
 
மரியாதை என்பது நாம் கொடுத்தால் தான் திரும்ப வரும். 30 வயது பிரதீப்பை வாடா போடா என்று பேசுவது அவரது எதிர்காலத்துக்கு நல்லதல்ல, என் அப்பா கூட என்னை வாடா போடா என்று பேசியதில்லை, அந்த அளவுக்கு வயதில் சிறியவர்களுக்கு கூட மரியாதை கொடுப்பார், அந்த ஒரு விஷயத்தை மட்டும் ஜோவிகா கற்றுக் கொண்டால் அவர் வாழ்க்கையில் முன்னேறுவார் என்றும் அறிவுரை கூறினார். 
 
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
Edited by Siva