புதன், 5 பிப்ரவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 23 நவம்பர் 2023 (07:41 IST)

விசித்ராவுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தெலுங்கு நடிகர் இவர்தானா? நெட்டிசன்கள் விவாதம்!

தமிழ் மற்றும் தென்னிந்திய மொழிகளில் கவர்ச்சி நடிகையாக நடித்து பிரபலம் ஆனவர் விசித்ரா. ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலகிய அவர் இப்போது பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மீண்டும் புகழ் வெளிச்சத்துக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனக்கு சினிமா உலகில் நடந்த பாலியல் தொல்லை குறித்து பேசியுள்ளார். அதில் “நான் 20 வருடங்களுக்கு முன்னர் நடித்த ஒரு தெலுங்கு படத்தில், அந்த படத்தின் ஹீரோ என்னை அவரின் ரூமுக்கு அழைத்தார். ஆனால் நான் செல்லவில்லை. இதுபற்றி பேசும்போது அடுத்த நாள் அந்த படத்தின் ஸ்டண்ட் இயக்குனர் என்னைக் கண்ணத்தில் அறைந்துவிட்டார். அதனால்தான் நான் சினிமாவை விட்டு விலகினேன்” எனக் கூறியிருந்தார்.

இது சம்மந்தமான வீடியோக்கள் இணையத்தில் வைரலான நிலையில் தெலுங்கு ரசிகர்கள் ‘விசித்ரா குறிப்பிடும் அந்த நடிகர் தெலுங்கு முன்னணி நடிகரான பாலகிருஷ்ணாதான் என்றும் அந்த ஸ்டண்ட் மாஸ்டர் விஜய்தான் என்றும் கருத்து தெரிவித்து விவாதித்து வருகின்றனர். 2001 ஆம் ஆண்டு பலேவிடி பசு படத்தில் பாலய்யாவோடு விசித்ரா இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.