புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 12 ஜனவரி 2020 (08:37 IST)

ஜல்லிக்கட்டு கதைக்களத்தில் வெற்றிமாறன் , சூர்யா படம் – டைட்டில் இதுதான் !

வெற்றிமாறன் சூர்யாவை வைத்து இயக்கும் திரைப்படத்துக்கு வாடிவாசல் எனப் பெயர் வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அசுரனின் இமாலய  வெற்றி இயக்குனர் வெற்றிமாறனின் பக்கம் பெரிய நடிகர்களைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அவரிடம் ஷாருக் கான், சூர்யா, விஜய் ஆகியோர் கதைக் கேட்டுள்ளனர். இதில் சூர்யாவுக்கு அவர் சொன்ன கதை பிடித்துள்ளதால் அந்த படம் விரைவில் தொடங்கவுள்ளது. இந்த வித்தியாசமான கூட்டணி ரசிகர்களின் ஆவலைத் தூண்டியுள்ளது.

இந்த படத்தை பற்றி இப்போது மேலும் ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. வரிசையாக நாவல்களை வைத்து திரைப்படம் எடுத்து வரும் வெற்றிமாறன், இந்த முறையும் ஒரு நாவலைதான் திரைப்படமாக எடுக்க இருப்பதாக தெரிகிறது. சமீபத்தில் விருது விழா ஒன்றில் பேசிய வெற்றிமாறன் சூர்யா படத்துக்கு வாடிவாசல் எனப் பெயர் வைத்துள்ளதாக சொல்லியுள்ளார். வாடிவாசல் என்ற பெயரில் எழுத்தாளர் சி சு செல்லப்பா ஒரு நாவல் ஜல்லிக்கட்டை மையப்படுத்தி எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.