செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : திங்கள், 6 ஜனவரி 2020 (18:51 IST)

நான் திரும்ப வருவேன்னு எதிர்பார்கல இல்ல...சூர்யாவின் "சூரரைப் போற்று" டீசர்!

சூர்யா நடிக்கும் ’சூரரைப் போற்று’ படத்தின் டீசர் சற்றுமுன் இணையத்தில் வெளியாகியுள்ளது. 
 
சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ’சூரரைப்போற்று’. இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிக்கிறது. இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். இவர்களுடன் கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்ககளில் நடித்துள்ளனர்.
 
ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அண்மையில் அடுத்தடுத்து வெளிவந்த இப்படத்தில்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் இரண்டாம் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 
 
எதிர்பார்கல இல்ல நான் திரும்ப வருவேன்னு எதிர்பார்கல இல்ல அதுவும் இப்படி வருவேன்னு எதிர்ப்பார்கல இல்ல என்று சூர்யா பேசும் மாஸ் வசனம்...பைக் ரேஸ்....உள்ளிட்ட பல பேன் மூமென்ட்ஸ் இப்படத்தில் உள்ளடங்கியுள்ளது. சுதா கொங்காராவின் சிறந்த பிலிம் மேக்கிங் , சிறந்த எடிட்டிங் உள்ளிட்டவை ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.