வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 2 டிசம்பர் 2020 (07:58 IST)

வெற்றிமாறன்-சூரி படத்தின் கதை இதுதான்: பரபரப்பு தகவல்

வெற்றிமாறன்-சூரி படத்தின் கதை இதுதான்: பரபரப்பு தகவல்
பிரபல இயக்குனர் வெற்றிமாறன், தனுஷ் நடித்த அசுரன் என்ற வெற்றி படத்தை இயக்கிய பின்னர், சூரி கதாநாயகனாக நடிக்க இருக்கும் ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் சூரி மற்றும் பாரதிராஜா உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தின் கதை ’துணைவன்’ என்ற சிறுகதையில் இருந்து திரைக்கதை ஆக்கப்பட்டுள்ளது என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது 
 
ஆனந்தவிகடனில் 1992ஆம் ஆண்டு ஜெயமோகன் எழுதிய ’துணைவன்’ என்ற சிறுகதைதான் வெற்றிமாறன்-சூரி படத்தின் கதை என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு சத்தியமங்கலத்தில் உள்ள அடர்ந்த காடுகளில் டிசம்பர் 8ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
தொடர்ச்சியாக 40 நாட்கள் ஒரே ஷெட்யூலில் இந்த படத்தின் படப்பிடிப்பை முடிக்க வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளதாகவும் இந்த படத்தை முடித்துவிட்டு அவர் அடுத்ததாக வாடிவாசல் படத்தை இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன