புதன், 18 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 20 செப்டம்பர் 2024 (12:08 IST)

இன்று ஒரே நாளில் 6 படங்கள் ரிலீஸ்… ரசிகர்கள் ஆதரவு எந்த படத்துக்கு?

2024 ஆம் ஆண்டின் முதல் பாதி தமிழ் சினிமாவுக்கும், திரைப்பட விரும்பிகளுக்கும் நல்லபடியாக அமையவில்லை. பல முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸாகி மண்ணைக் கவ்வின. அரண்மனை, மகாராஜா மற்றும் கருடன் போன்ற படங்கள் மட்டுமே நல்ல வெற்றியைப் பெற்றன.

ஆனால் இரண்டாவது பாதி நல்லபடியாக சென்று கொண்டிருக்கிறது. கடந்த மாதம் வெளியான தங்கலான், வாழை, டிமாண்டி காலணி 2 ஆகிய படங்கள் பெரிய வெற்றியைப் பெற்றன. அதே போல செப்டம்பர் தொடக்கத்தில் வெளியான விஜய்யின் கோட் திரைப்படமும் வசூலில் கலக்கியது.

இந்நிலையில் இன்று ஒரே நாளில் ஆறு தமிழ்ப் படங்கள் ரிலீஸாகியுள்ளன. ஹரிஷ் கல்யாண் நடிப்பில் ‘லப்பர் பந்து’, சீனு ராமசாமியின் கோழிப்பண்ணை செல்லதுரை, சசிகுமாரின் நந்தன், சத்யராஜ் நடித்துள்ள தோழர் சே குவேரா, ஆதி நடித்துள்ள கடைசி உலகப் போர் மற்றும் தோனிமா ஆகிய ஆறு படங்கள் ரிலீஸாகியுள்ளன. இதில் லப்பர் பந்து, நந்தன் மற்றும் கடைசி உலகப் போர் ஆகிய படங்களுக்கு ரிலீஸுக்கு முன்பே எதிர்பார்ப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.