1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 20 ஜனவரி 2021 (17:34 IST)

ஆடுகளம் படத்தின் 10 ஆண்டுகள்… வெற்றிமாறன் சொன்ன டைட்டில் சீக்ரெட்!

வெற்றிமாறன் இயக்கி தனுஷ் மற்றும் டாப்சி ஆகியோர் நடித்து 2011 ஆம் ஆண்டு வெளியான ஆடுகளம் படத்தின் 10 ஆண்டுகள் கொண்டாடப்பட்டு வருகிறது.

தனுஷ், டாப்சி மற்றும் எழுத்தாளர் ஜெயபாலன் ஆகியோர் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான ஆடுகளம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல் தனுஷ், வெற்றிமாறன் உள்ளிட்டோருக்கு 6 தேசிய விருதுகளைப் பெற்றது. மிகச்சிறந்த திரைக்கதை அமைத்து இந்த படத்தை இயக்கியிருந்தார் வெற்றிமாறன்.

இந்நிலையில் இப்போது ஆடுகளம் படத்தின் 10 ஆண்டுகள் நிறைவடைந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. அதை நினைவுக்கூறும் விதமாக இயக்குனர் வெற்றிமாறன் அளித்த நேர்காணலில் ‘முதலில் இந்த படத்துக்கு சண்டக்கோழி என்றுதான் பெயர் வைத்தோம். ஆனால் அந்த பெயரில் ஏற்கனவே ஒரு படம் வெளியாகிவிட்டது. அதனால் சேவல் என பெயர் வைக்கலாம் என முடிவு செய்தோம். ஆனால் அந்த பெயரில் இயக்குனர் ஹரி ஒரு படத்தை இயக்கி வந்ததால் வேறு வழி இல்லாமல் ஆடுகளம் எனப் பெயர் வைத்தோம்’ எனக் கூறியுள்ளார்.