வெற்றிமாறன் படத்தில் கதாநாயகியான ஜி வி பிரகாஷ்ராஜ் தங்கை!

Last Modified வெள்ளி, 15 ஜனவரி 2021 (14:52 IST)

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில் ஜி வி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சத்திய மங்கலம் காடுகளில் நடக்க உள்ளது. இந்த படத்தில் வில்லனாக நடிக்க பாரதிராஜா முன்பு ஒப்பந்தம் ஆனார். ஆனால் படப்பிடிப்பு நடக்க உள்ள டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் சமவெளிப்பகுதியிலேயே குளிர் அதிகமாக இருக்கும். இந்நிலையில் காடுகளில் முழுப் படப்பிடிப்பும் நடக்க உள்ளதால் பாரதிராஜாவால் வயோதிகத்தின் காரணமாக குளிரை தாங்க முடியாத சூழல் உருவாகவே அப்படத்தில் அவர் விலகினாராம்.

இதையடுத்து அந்த கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. கதாநாயகனாக பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதி தன் படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடிக்கும் சூரிக்கு வில்லனாக நடிக்க சம்மதித்து இருப்பது வெற்றிமாறனுக்காகவும், அந்த கதைக்காகவும்தான் என சொல்லப்படுகிறது.

இதையடுத்து படத்தின் அடுத்த அப்டேட்டாக கதாநாயகி யார் என்பது வெளியாகியுள்ளது. சமீபத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாகி கவனம் பெற்ற பாவக்கதைகள் ஆந்தாலஜியில் இடம்பெற்ற தங்கம் குறும்படத்தில் நடித்த ஜிவி பிரகாஷின் தங்கை பவானிஸ்ரீ நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாரம்.
இதில் மேலும் படிக்கவும் :