1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 22 ஏப்ரல் 2024 (07:55 IST)

வெற்றிமாறன் கதையில் லாரன்ஸ் நடிக்கும் படம்… இயக்குனர் மாற்றமா?

இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரி மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் உருவாகும் விடுதலை 2 படத்தை இயக்கி வருகிறார். இது தவிர அவர் சூரியின் கருடன் படத்துக்கு கதை எழுதியுள்ளார். கோபி நயினார் இயக்கத்தில் உருவாகும் மனுசி திரைப்படத்தை தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் இப்போது அவர் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ள புதிய படத்துக்கு கதை மற்றும் திரைக்கதை எழுதியுள்ளார். இந்த படத்தை பைவ்ஸ்டார் கதிரேசன் தயாரிக்கிறார். இந்த படத்தை முதலில் இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்குவார் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அவர் நீக்கப்பட்டு வேறு ஒரு இயக்குனர் இந்த படத்தை இயக்குவார் என சொல்லப்படுகிறது.

இந்த படம் பற்றி பதிவு செய்துள்ள ராகவா லாரன்ஸ் “வெற்றிமாறன் சார் கூறிய அதிகாரம் படத்தின் கதையைக் கேட்டு பிரமித்துப் போனேன். இந்த பிரம்மாண்டமான கதையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. இந்த கதையை எனக்குக் கொடுத்த வெற்றிமாறனுக்கும் தயாரிப்பாளர் கதிரேசனுக்கும் நன்றி” எனக் கூறியுள்ளார்.