1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 16 ஏப்ரல் 2024 (07:39 IST)

ராகவா லாரன்ஸின் புதிய படத்துக்காக இறக்குமதி ஆகும் பாலிவுட் ஹீரோயின் & வில்லன்!

சமீபத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ஹண்டர் மற்றும் பென்ஸ் ஆகிய இரு படங்களின் முதல் லுக் போஸ்டர் ஒரே நாளில் வெளியானது. இதில் ஹண்டர் என்ற படத்தை  பாலிவுட் தயாரிப்பாளரான மனிஷ் என்பவர் பைனான்ஸ் செய்ய பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது.

இந்த படத்தை வெங்கட் மோகன் என்பவர் இயக்க இருப்பதாகவும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும் இந்த படம் ராகவா லாரன்ஸின் 25 வது படம் என்ற பெருமைக்குரியது ஆகும். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் தொடங்கும் என்றும் 2025 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் இந்த படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க பாலிவுட் நடிகர் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. அதே போல படத்தின் நாயகியாக நடிக்க பாலிவுட் நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படம் கதாநாயகன் மற்றும் ஒரு புலிக்கு இடையிலான பாசப்பிணைப்பை ஒட்டி உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.