கமல் வெற்றிமாறன் சந்திப்பு… நடந்தது என்ன?
நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு பல யூகங்களுக்கு காரணமாகி உள்ளது.
சமீபத்தில் சென்னையில் கமல் மற்றும் வெற்றிமாறன் ஆகியோருக்கான சந்திப்பு சினிமா வட்டாரத்தில் பெரிய சந்தேகங்களுக்கு இட்டு சென்றுள்ளது. அதனால் அவர்கள் இருவரும் ஒரு படத்தில் இணையப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் சந்திப்பின் முக்கியக் காரணம் இருவரும் இணைவது சம்மந்தமாக பேசுவதற்காக இல்லையாம்.
சமீபத்தில் ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள ஒளிப்பதிவு சட்டத்திருத்தம் பற்றி பேசுவதற்கானாம். சினிமாத்துறையினர் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை சந்தித்துள்ளது. இந்நிலையில் தமிழ் சினிமாவில் இந்த எதிர்ப்புப் போராட்டத்தை கமல் முன்னெடுத்து செல்ல வேண்டும் என்று பேசுவதற்காகதானாம். அதன் பின்னரே இருவரும் இணையும் படம் பற்றி பேசினார்கள் என்று சொல்லப்படுகிறது.