வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: செவ்வாய், 29 ஜூன் 2021 (23:58 IST)

விஜய்சேதுபதியால் அதிர்ச்சி அடைந்த கமல் !

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரும் மக்கள் நீதி மையத்தில் தலைவருமான கமல்ஹாசனின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் கமல்ஹாசன். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தின் விஜய்சேதுபதி வில்லனாக நடிப்பதாக ஒரு தகவல் வெளியானது. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான  அறிவிப்பு வெளிவர தாமதம் ஆவதற்கு விஜய் சேதுபதிதான் காரணம் எனக் கூறப்படுகிறது.

அதாவது. விக்ரம் படத்தில் கமல்ஹாசனுக்கு வில்லனாக நடிக்க விஜய்சேதுபதி ரூ.15 கோடி சம்பளம் கேட்டுள்ளதாகவும் இதைக் கொடுக்க கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயங்குவதாகவும் தகவல் வெளியாகிறது.

இப்படத்தில் மற்றொரு வில்லனாக மலையாள நடிகர் பகத் பாசில் ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படத்தில் ஆரம்பக் கட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது அதேசமயம் இப்படத்திற்கான பிரமாண்ட செட்டுகள் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.