புதன், 18 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 12 ஆகஸ்ட் 2024 (07:32 IST)

இந்தக் கதையை மிஸ் பண்ணிடாதன்னு வெற்றிமாறன் அண்ணன் சொன்னார் – ‘கொட்டுக்காளி’ குறித்து சூரி!

‘விடுதலை’ படத்தின் மூலம் கதாநாயகனான சூரி அதன் பின்னர் நடித்த ‘கருடன்’ திரைப்படம் கமர்ஷியல் வெற்றியைப் பெற்றது. அதையடுத்து இப்போது ’கொட்டுக்காளி’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை கூழாங்கல் படத்தின் மூலம் கவனம் பெற்ற பி எஸ் வினோத்ராஜ் இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார். அன்னாபென் கதாநாயகியாக நடித்துள்ளார்.

படம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் சென்று கலந்துகொண்டு பாராட்டுகளைப் பெற்றது. இந்நிலையில் படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தைப் பார்த்துள்ள திரைப் பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் கொட்டுக்காளி திரைப்படம் குறித்து பேசியுள்ள சூரி “விடுதலை படம் முடியும் வரை வேறு எந்த படமும் ஒப்புக்கொள்ள வேண்டாம் என்று வெற்றிமாறன் அண்ணன் சொன்னார். ஆனால் கொட்டுக்காளி கதையைக் கேட்ட பின்னர் ‘இந்த கதையை மிஸ் பண்ணிடாத” என சொல்லி நடிக்க சொன்னார்” எனக் கூறியுள்ளார்.