1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வெள்ளி, 9 ஆகஸ்ட் 2024 (09:12 IST)

ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் சூரி ஹீரோவா? மாஸ் தகவல்..!

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் நடிகர் சூரி நாயகனாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் முடிந்து நடிகர் தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. 
 
இந்த படத்தின் நாயகனாக நடிக்க கவின், விஜய் சேதுபதி உள்பட ஒரு சிலரிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்ட வந்த நிலையில் தற்போது சூரியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் அவரிடம் ஒரு மணி நேரம் ஜேசன் சஞ்சய் கதை கூறியதை அடுத்து அவரும் நடிக்க ஒப்பு கொண்டதாகவும் கூறப்படுகிறது.
 
சூரி தற்போது மாஸ் ஹீரோ ஆகிவிட்டதால் ஜேசன் சஞ்சய் கதைக்கு அவர் பொருத்தமாக இருப்பார் என்று கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Siva