வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 1 ஆகஸ்ட் 2024 (14:58 IST)

வயநாடு செய்திகள் கேட்க கேட்க மனசு பதறுது.. நடிகர் சூரியின் இரங்கல் பதிவு..!

வயநாடு செய்திகள் கேட்க கேட்க மனசு பதறுது என நடிகர் சூரி தனது எக்ஸ் தளத்தில் இரங்கல் பதிவு செய்துள்ளார்.
 
நேற்று முன்தினம் அதிகாலை வயநாடு பகுதியில் உள்ள மூன்று கிராமங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய சேதம் என்றும் சுமார் 200க்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளதாகவும் இன்னும் நூற்றுக்கணக்கானோர் காணவில்லை என்றும் அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது என்று கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் இந்த துயர சம்பவத்திற்கு திரை உலகை சேர்ந்த பலர் தங்களது சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் சிலர் கேரள மாநிலத்திற்கு நிவாரண நிதியையும் அழகி வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் சூரிய தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
வயநாடு செய்திகள் கேட்க கேட்க மனசு பதறுது ! நாம் அனைவரும் கொண்டாடிய பசுமையான இடங்கள் எல்லாம் இயற்கை அன்னையின் பெரும் சீற்றத்துக்கு இரையாகி உள்ளது. நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர், ஆயிரக்கணக்கான மக்கள் வீடும் வாழ்வாதாரமும் இழந்து உள்ளனர், அங்கிருந்து வரும் காட்சிகள் பார்க்க பார்க்க பகீரென்கிறது!!  வயநாடு மக்களுக்காக அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டுகிறேன். 
 
நாம் அனைவரும் நம்மால் இயன்ற உதவிக்கரம் நீட்ட வேண்டும். இந்த நேரத்தில் களத்தில் நிவாரணம் மற்றும் மீட்பு பணியில் ஈடுப்பட்டு இருக்கும் நல்லுள்ளங்கள் அனைவருக்கும் அந்த இறைவன் துணை இருக்க வேண்டும், அவர்கள் அனைவருக்கும் பாதம் தொட்ட நன்றிகள்.
 
Edited by Mahendran