திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 30 டிசம்பர் 2018 (16:43 IST)

இந்திய சினிமாவின் ஜாம்பவான் மிருணாள் சென் காலமானார்

இந்திய திரைப்படங்களை உலக அளவுக்கு கொண்டு சென்றவரும், இந்திய சினிமாவின் ஜாம்பவான்களில் ஒருவராக கருதப்படுபவருமான இயக்குனர் மிருணாள் சென் என்று காலை காலமானார். அவருக்கு வயது 95

இந்தி, தெலுங்கு, ஒடிசா, வங்காளம் ஆகிய மொழிகளில் 30 படங்கள், 14 குறும்படங்கள், 4 ஆவணப்படங்கள் இயக்கிய மிருணாள் சென், சிறந்த திரைக்கதை, படம், இயக்குனருக்கான தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.

95 வயதானதால் மூப்பு காரணமாக கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்

மிருணாள் சென் இயக்கிய பல திரைப்படங்கள் நடுத்தர வகுப்பு மக்களின் குடும்பப் பிரச்னைகளை சித்தரிக்கும் வகையில் இருந்தது. குறைந்த செலவில் நிறைந்த கருத்துக்களுடன் இவர் இயக்கிய ‘புவன் ஷோம்’  என்ற திரைப்படம் இந்திய அளவில் மட்டுமின்றி உலக அளவிலும் பெரிய இயக்குநராக அடையாளப்படுத்தியது.

இந்திய சினிமாவின் மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது, பத்மபூஷண் உட்பட பல விருதுகளை வென்றுள்ள இவரது மறைவிற்கு ஒட்டுமொத்த இந்திய திரையுலகமும் இரங்கல் தெரிவித்து வருகின்றது.