1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 28 டிசம்பர் 2018 (11:22 IST)

கர்ப்பிணிப் பெண்ணுக்கு எய்ட்ஸ் பரவியது எப்படி – ஒரு மருத்துவரின் பார்வையில் -பகுதி 2

சமீபத்தில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பிரசவக் காலத்தின் போது தேவைப்படும் இரும்புச் சத்துக்காக ரத்தம் ஏற்றிய போது ஹெச்.ஐ.வி. பரவியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்ற பகுதியின் தொடர்ச்சி

எய்ட்ஸ் பரிசோதனைகள் செய்யப்படும் முறை
அதற்கடுத்ததாக, முக்கியமான பரிசோதனைகள் எச்.ஐ.வி மற்றும் ஹெபாடைடிஸ் பி சோதனை இந்த இரண்டு தொற்று நோய்களும் ரத்தத்தால் பரவும் தன்மை கொண்டது.  ஆகவே,  கொடையாக வாங்கப்பட்ட குருதியில் எச்.ஐ.வி நோய் தொற்றும், ஹெபாடைடிஸ் - பி நோய் தொற்றும் இருக்கிறதா? என்று கட்டாயம் கண்டறியப்படும்.
இந்த பரிசோதனை பாசிடிவாக அதாவது கிருமி தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டால் அந்த ரத்தம் யாருக்கும் ஏற்றப்படாமல் மருத்துவக்கழிவுகளில் சேர்க்கப்படும் அதை கொடுத்த கொடையாளருக்கு நோய் தொற்று இருப்பது அறிவிக்கப்படும். இது அவர் சிகிச்சை எடுத்துக்கொள்ளவும், மேலும் அவர் ரத்தம் கொடை கொடுப்பதையும் தடுக்கும். இந்த குறிப்பிட்ட நிகழ்விலும் , கொடையாக வாங்கப்பட்ட ரத்தத்தில் மேற்சொன்ன  Cross matching,  HIV பரிசோதனை, Hepatitis - B பரிசோதனை 

செய்யப்பட்டிருப்பதாக முதற்கட்ட துறை சார்ந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அந்த மூன்று பரிசோதனைகளும் சரியாக இருந்ததால் தான் ரத்தம் அந்த கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்டுள்ளது என்கிறது ஆய்வு முடிவு. எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட ஒருவருக்கு.. அவரது ரத்த பரிசோதனையில் எச்.ஐ.வி இல்லை என்று வரும் வாய்ப்பு இருக்கிறதா???? இருக்கிறது. எப்படி?  அதற்கு அந்த பரிசோதனைகள்  பற்றியும் எச்.ஐ.வி கிருமி உடலுக்குள் எப்படி பெருக்கம் செய்கிறது என்றும் பார்க்க வேண்டும். ஒருவருக்கு இன்று தான் எச்.ஐ.வி நோய் தொற்று (HIV exposure) ஏற்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். அவரது ரத்தத்தை உடனே எச்.ஐ.விக்கு சோதனை செய்து பார்த்தால் நெகடிவ் என்று தான் வரும்.

எப்படி தவறு நடக்கிறது?
காரணம் நாம் பொதுவாக செய்யும் எச்.ஐ.வி பரிசோதனை  என்பது "Fourth generation / 3rd generation ELISA antigen- antibody test " இதில் antigen என்பது உடலுக்குள் வரும் எச்.ஐ.வி கிருமியில் இருக்கும் அந்த antigen க்கு எதிராக உடல் செய்யும் எதிர்வினைதான் antibodies எனப்படும். நாம் செய்யும் இந்த ELIZA (enzyme linked immuno sorbent assay ) என்பது நமது உடலில் உருவான antibody களை அளந்து அது மூலம் எச்.ஐ.வி தொற்று இருப்பதை கண்டறியும்.

எச்.ஐ.வி உடலுக்குள் நுழைந்த முதல் மற்றும் இரண்டாம் வாரம் - உள்ளே வந்த வைரஸின் அளவு பொறுத்து அதற்குரிய Polymerase chain reaction எனும் சோதனை மூலம் சில வைரஸ்களை பல வைரஸ்களாக பெருக்கம் செய்து கண்டறியலாம். ஆனால் இது மிகவும் காஸ்ட்லியான பரிசோதனை. இதை அனைவருக்கும் செய்வது நமது நாட்டின் நிதி சூழ்நிலைக்கு தற்போதைக்கு சாத்தியமற்றது. ஆனால் இந்த  கிருமிக்கு எதிராக உடல் உற்பத்தி செய்த antibody களை நான்காவது வாரத்தில்( 28 நாட்களுக்கு பிறகு தான்) இருந்து தான் கண்டறிய முடியும். ( பெரும்பாலும் அனைத்து ரத்த வங்கிகளிலும் இந்த 4th generation ELIZA kits வழங்கப்பட்டுள்ளது) ஆகவே ஒருவருக்கு இன்று எச்.ஐ.வி தொற்று புதிதாக ஏற்பட்டு இருந்தாலும் , அவருக்கு இன்று பரிசோதனை செய்தால் எச்.ஐ.வி இல்லை என்று தான் வரும்.

அவரது ரத்தத்தை நான்கு வாரங்கள் அல்லது 28 நாட்களுக்கு பிறகு சோதனை செய்தால் தான் "பாசிடிவ்" என்று காட்டும். இன்னும் மூன்று மாதங்களுக்கு பிறகு சோதனை செய்து அப்போது வரும் பரிசோதனை முடிவே இறுதியானது இதைத்தான் மருத்துவம் "window period " என்கிறது. window period என்பது யாதெனில் ஒருவருக்கு நோய் கிருமித் தொற்று ஏற்பட்ட அன்றிலிருந்து அவருக்கு அந்த நோயின் பரிசோதனை முடிவு " பாசிடிவ்" என்று வரும் நாளுக்கு இடைப்பட்ட இந்த காலத்தை window period என்கிறோம்.

இது நோய்க்கு நோய் மாறுபடுகிறது. எச்.ஐ.வி பொறுத்தவரை இப்போதைய நமது 4th generation ELIZA kits க்குரிய window period - 28 நாட்கள் இனி நாம் எடுக்கும் அனைத்து ரத்த யூனிட்களுக்கும் PCR எனும் polymerase chain reaction செய்தாலும் அதற்குரிய window period 7 முதல் 14 நாட்களாகும். Polymerase chain reaction என்பது காஸ்ட்லியான பரிசோதனை.  இப்போது நாம் செய்யும் rapid card test முறையில் செய்ய இயலாது. தலைசிறந்த ஆய்வகத்தில் மட்டுமே செய்ய இயலும். மேலும் அந்த பரிசோதனை நேரம் பிடிக்கும் time consuming test. ஆகவே எமர்ஜென்சி நிலையில் அது பயன் தராது.

Windows period குழப்பங்கள்
ஆகவே இந்த சம்பவத்தில் ரத்தம் கொடுத்த கொடையாளர் - நவம்பர் 30 ஆம் தேதி ரத்தம் கொடுத்திருக்கிறார். அவருக்கு எச்.ஐ.வி தொற்று நவம்பர் 15 முதல் 30 க்குள் ஏற்பட்டிருந்தால் , அவரது ரத்த பரிசோதனை முடிவில் "Negative" என்று தான் வரும். காரணம் அது அந்த கிருமிக்கான Window period. ஆகவே , அந்த ஆய்வக நிபுணர்கள் செய்த எச்.ஐ.வி பரிசோதனை முடிவுகள் நெகடிவாக வந்தது என்பது அவர் window period இல் இருந்ததன் விளைவாகவும் இருக்கலாம்.

மேலும் அவர் வெளிநாடு செல்வதற்காக Medical tests செய்வதற்கு கடந்த வாரம் ரத்தப்பரிசோதனைக்கு ரத்தம் கொடுத்துள்ளார்.  அப்போது அவருக்கு HIV - positive என்று வந்துள்ளது. இதற்கு காரணம் அவர் window period ஐ தாண்டி விட்டதும் இருக்கலாம். அந்த நல்ல மனதுடைய கொடையாளர் தனக்கு எச்.ஐ.வி இருப்பது அறிந்ததும் உடனே தான் ரத்தம் கொடையாக கொடுத்த வங்கிக்கு வந்து அதை கூறுகிறார். ஆனால் அதற்குள் அந்த குருதி அது தேவைப்பட்ட கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்டு விட்டது.

இது ஒரு சோக நிகழ்வு. பெரும் விபத்து. இதில் அந்த ஆய்வக நுட்புணர்கள் தாங்கள் அந்த கொடையாளரின் ரத்தத்தை எச்.ஐ.வி பரிசோதனைக்கு உட்படுத்தியாக முதல் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றனஅவர்கள் தாங்கள் செய்ய வேண்டிய அந்த பரிசோதனையை சரியாக செய்யாமல் ரத்தத்தை ஏற்றியிருந்தால் அது Gross / serious Professional Negligence  என்ற வரையறைக்குள் வரும். அது அவர்களுக்கு கடும் தண்டனையை பெற்றுத் தரும்.  ஆனால் அதுவே அவர்கள் செய்ய வேண்டிய பரிசோதனைகளை செய்திருந்து window period விளைவாக நெகடிவ் என்று வந்திருந்தால்  அது Medical test error (Error Of God ) என்ற ரீதியில் அணுகப்பட வேண்டும். காரணம் இது அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டிய பரிசோதனை முடிவில் உள்ள குறைபாடு. தற்போதைக்கு அந்த ஆய்வக நிபுணர்கள் மூவரையும் அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது.  மருத்துவ குழுவின் முடிவுகளை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் நமக்கு தெரிய வரும்.