செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 21 ஜூன் 2022 (17:40 IST)

சிவகார்த்திகேயனை இயக்கும் வெங்கட்பிரபு..பிரபல நிறுவனம் தயாரிப்பு!

தமிழ் சினிமாவில் இளம் நடிகர் சிவகார்த்திகேயன்  நடிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியான  டான் படம் வெற்றி பெற்ற நிலையில்  தற்போது அவரது  நடிப்பில் அயலான், பிரின்ஸ் ஆகிய படங்கள் விரைவில் வெளியாக உள்ளன.

இந்த நிலையில்,  அவரது அடுத்த படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

அதில், பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு நாகசைதன்யாவை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாகவும்,  இதை முடித்த பின்னர், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு கல்லூரியில் நடக்கும் கதை அடிப்படையிலான படத்தை இயக்கவுள்ளதாகவும் இப்படத்திற்கு சப் டைட்டிலாக வெங்கட்பிரபு கேம்பஸ் அல்லது சிலபஸ் எனப் பெயரிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. முக்கியமாக இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.