வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 20 ஜூன் 2022 (20:01 IST)

சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ படத்தின் அடுத்த அப்டேட்!

sivakarthikeyan
சிவகார்த்திகேயன் நடித்த ‘பிரின்ஸ்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
உலக உருண்டையை சிவகார்த்திகேயன் கையில் வைத்திருப்பது போன்ற இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இருந்து அவர் உலகம் சுற்றும் வாலிபன் கேரக்டரில் நடித்திருப்பார்என்று கூறப்பட்டது 
 
இந்த நிலையில் ‘பிரின்ஸ்’ படத்தின் அடுத்த அப்டேட் நாளை காலை 10.45 மணிக்கு வெளியாகும் என இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை அடுத்து சிவகார்த்திகேயன் ரசிகர்கள் நாளை தயாராக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அனுதீப் இயக்கத்தில் தமன் இசையில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், மரியா, பிரேம்ஜி அமரன், சத்யராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர்