1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 21 ஜூன் 2022 (09:04 IST)

‘அரபிக்குத்து’ வைரல் ஹிட்டுக்குப் பி்ன்… ‘பிரின்ஸ்’ படத்தில் பாடல் எழுதும் சிவகார்த்திகேயன்

இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்க உள்ளார். தமன் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு, காரைக்குடி, பாண்டிசேரி மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் நடந்தது. படத்தில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த நடிகை ஒருவர் நடிக்கிறார். அடுத்த கட்ட படப்பிடிப்பு லண்டனில் விரைவில் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் முதல் லுக் மற்றும் தலைப்பு சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. அதையடுத்து இன்று இரண்டாவது லுக் போஸ்டர் வெளியானது. இந்நிலையில் படத்தின் ஆடியோ உரிமையை தெலுங்கின் முன்னணி நிறுவனமான ஆதித்யா மியுசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அதுபோலவே படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன் கைப்பற்றியுள்ளார்.

இன்று காலை பிரின்ஸ் படத்தின் அடுத்த கட்ட அப்டேட் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் இசையமைப்பாளர் தமன் தனது சமூகவலைதளப் பக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் அனுதீப் உடன் பாடல் பதிவு செய்யும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த பாடலை சிவகார்த்திகேயன்தான் எழுதியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே பீஸ்ட் படத்தில் சிவகார்த்திகேயன் எழுதிய அரபிக்குத்து பாடல் 10 கோடி பேரால் இணையத்தில் பார்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.