1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 15 ஜூன் 2022 (22:53 IST)

ரஜினியின் படத்தை 15 தடவைக்கு மேல் பார்த்திருக்கிறேன்- நடிகர் சிவகார்த்திகேயன்

பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் ஒன்றாக அமைந்தது. அதன் பின்னர் ஷங்கரும் ரஜினிகாந்தும் இணைந்து எந்திரன் மற்றும் 2.0 ஆகிய பிரம்மாண்ட படங்களை உருவாக்கினார்கள்.

இந்நிலையில் சிவாஜி ரிலீஸாகி 15 ஆண்டுகளை தற்போது நிறைவு செய்துள்ளது. அதைக்கொண்டாடும் விதமாக AVM நிறுவனம் சமூகவலைதளப் பக்கத்தில் பல சுவாரஸ்யமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்ந்து வருகிறது. இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து அந்த புகைப்படத்தை இணையத்தில் பகிர, அது வைரலானது.

இந்த நிலையில்  நடிகர் சிவகார்த்திகேயன், சிவாஜி படத்தை 15 தடவைக்கு மேல் பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், சிவாஜி படத்தை தியேட்டரில் 15 தடவைக்கு மேல் பார்த்திருக்கிறேன். அது ஒரு அற்புதமான அனுபவம்… ரஜினி சாரின் சிறந்த படங்களில் சிவாஜியும் ஒன்று. அப்படத்தில், ரஜினி சாரின் நடை,ஸ்டைல் ஆகியவற்றில் சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார் . சினிமாவில் இந்த மறக்க முடியாத  படத்தைக் கொடுக்க ஷங்கர் சாருக்கும், ஏவிஎம் தயரிப்பு நிறுவனத்திற்கும்    நன்றி எனத் தெரிவித்துள்ளார்.