1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 18 செப்டம்பர் 2022 (08:59 IST)

வெங்கட்பிரபு- நாக சைதன்யா படத்தின் ஷூட்டிங் எப்போது?... லேட்டஸ்ட் தகவல்!

இயக்குனர் வெங்கட் பிரபு நாக சைதன்யா இயக்கத்தில் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் ஆனார்.

நாக சைதன்யா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் புதிய படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க உள்ளார். இந்த படத்தை சீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் தயாரிப்பாளர் மற்றும் நாக சைதன்யா ஆகியோரோடு வெங்கட்பிரபு இருக்கும் புகைப்படம் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த படத்தில் வில்லனாக அருண் விஜய் நடிக்க உள்ளார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் 23 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் இன்னும் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து அருண் விஜய் தற்போது விலகி விட்டதாக சொல்லப்படுகிறது.

நாக சைதன்யா நடித்த கடைசிப் படமான தேங்க் யூ ப்ளாப் ஆனதால் இந்த படத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதையடுத்து இப்போது படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அருண் விஜய்க்கு பதிலாக வேறொரு நடிகரை நடிக்க வைப்பதற்கான நடிகர் தேர்வும் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.