வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 1 செப்டம்பர் 2022 (13:08 IST)

ஆசிய கோப்பை - ஹாங்காங் அணிக்கு வெங்கட் பிரபு பாராட்டு!

hongkong
ஆசிய கோப்பை - ஹாங்காங் அணிக்கு வெங்கட் பிரபு பாராட்டு!
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகளுக்கிடையிலான போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது
 
இந்த போட்டியில் ஹாங்காங் சிறிய அணியாக இருந்தாலும் இந்திய அணியின் பந்துவீச்சு தாக்குப்பிடித்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழக்காமல் இருந்தது என்பது ஒரு சாதனையாக கருதப்பட்டது 
 
இந்த நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த இயக்குனர் வெங்கட்பிரபு, ஹாங்காங் அணியினரை உங்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என இந்தியர்களாகிய நாங்கள் சொல்வதில் பெருமை கொள்கிறோம். பல ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட ஒரு அணி ஆல் அவுட்டாகாமல் 150 ரன்களுக்கு மேல் எடுத்தது பெரிய சாதனை தான் என்று பதிவு செய்துள்ளார். அவரது இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது