“கதையோட ஒரு படம் பண்ணுங்க சார்…” என்ன இப்படி கலாய்ச்சுக்குறாங்க- வைரல் ட்வீட்ஸ்!
இயக்குனர்கள் சி எஸ் அமுதன் மற்றும் வெங்கட் பிரபு ஆகியோர் மாறி மாறி கலாய்த்துக்கொண்ட ட்வீட்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளன.
தமிழின் முதல் முழு நீள ஸ்பூப் படமாக உருவான தமிழ்ப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதையடுத்து அதன் இரண்டாம் பாகம் வெளியாகி அதுவும் வெற்றி பெற்றது. இந்நிலையில் அந்த படத்தின் இயக்குனர் சி எஸ் அமுதன் கவனிக்கப்படும் ஒரு இயக்குனராக உள்ளார். அதுமட்டுமில்லாமல் அவ்வப்போது அவர் வெளியிடும் நகைச்சுவையான சமூகவலைதளப் பதிவுகள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வருகின்றன.
இந்நிலையில் சமீபத்தில் அவரின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த இயக்குனர் வெங்கட்பிரபு “இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். உங்கள் முதல் பிரஷ்ஷான கதையான கொலை திரைப்படத்தைக் காண ஆவலாக இருக்கிறேன்.” எனக் கூறினார். அவருக்கு பதிலளித்த அமுதன் “நன்றி சார். நீங்களும் கதையுடன் ஒரு படம் பண்ணுங்கள்” எனக் கூறி பதிலளித்தார்.
அடுத்து அவருக்கு பதிலளித்த வெங்கட்பிரபு “நாங்க என்ன வச்சிக்கிட்டா வஞ்சனம் பண்றோம்” எனக் கூறியுள்ளார். இப்படி இருவரும் ஜாலியாக மாறி மாறி கலாய்த்துக் கொண்டது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.