பார்ட்டி திரைப்படம் இன்னும் ஏன் வெளியாகவில்லை – வெங்கட்பிரபு வருத்தம்!

Last Modified சனி, 8 ஆகஸ்ட் 2020 (18:43 IST)

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியுள்ள பார்ட்டி திரைப்படம் இன்னும் வெளியாகாதது ஏன் என்பது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை 28 படத்தின் 2-ம் பாகத்துக்குப் பின்னர் வெங்கட்பிரபு இயக்கிய படம் பார்ட்டி. இதில் சத்யராஜ், நாசர், ஜெயராம், ரம்யா
கிருஷ்ணன், ஜெய், சிவா, ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ் என பெரிய நட்சத்திரப் பட்டாளத்தோடு பார்ட்டிக்காகக்
களமிறங்கியிருக்கிறார் வெங்கட்பிரபு. படத்தின் டீசர் சில ஆண்டுகளுக்கு முன்னரே வெளியானது. ஆனால் அதன் பிறகு படத்தைப் பற்றி எந்தவித அறிவிப்பும் இல்லை.


அதனால் வெங்கட் பிரபுவும் மாநாடு படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். இந்நிலையில் இப்போது பார்ட்டி படம் ஏன் இன்னும் வெளியாகவில்லை என்பது குறித்து பேசியுள்ளார். அதில் ‘பார்ட்டி' படம் வெளியாகாமல் இருப்பது மிகப்பெரிய ஏமாற்றம். படப்பிடிப்பு நடத்த கஷ்டமான இடங்களில் குறுகிய காலத்தில் படப்பிடிப்பை முடித்தோம். ஆனால், இன்னும் தணிக்கையைக் கூட படம் தாண்டவில்லை. படத்தின் பட்ஜெட் பெரியது என்பது ஓடிடி பிளாட்பார்ம்களில் வெளியிட முடியவில்லை.
ஆனால், விரைவில் பிரச்சினைகள் தீரும் என்று நம்புகிறேன்’ எனக் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :