திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 23 மே 2023 (08:40 IST)

நான் சீரியஸா படமெடுத்தா ஓடமாட்டேங்குது… வெங்கட் பிரபு புலம்பல்!

பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா நடித்த கஸ்டடி திரைப்படம் நேற்று தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ் ஆனது.காவல்துறை அதிகாரியாக நாகசைதன்யா நடித்துள்ள இந்த படத்தில் நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார் என்பதும் மேலும் முக்கிய வேடத்தில் அரவிந்த்சாமி, ராதிகா உள்ளிட்ட பலர் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

வெங்கட் பிரபு படம் என நம்பி சென்ற ரசிகர்களை மொத்தமாக ஏமாற்றியது கஸ்டடி திரைப்படம். படத்தில் ஒரு நிமிடம் கூட ரசிக்கும் படியாக எதுவுமே இல்லையாம். வழக்கமாக வெங்கட் பிரபு யுவன் கூட்டணியில் பாடல்கள் ஹிட்டாகும். இந்த முறை இந்த கூட்டணியோடு இளையராஜா சேர்ந்தும் கூட பாடல்களும் ஹிட்டாகவில்லை என்பது ரசிகர்களுக்கு கூடுதல் வேதனை.

இந்நிலையில் இப்போது ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ள வெங்கட் பிரபு “நான் சீரியஸாக படம் எடுத்தால் ஓடமாட்டேங்குது. நானும் வெற்றிமாறன் மாதிரி படம் எடுக்கலாம்னு நெனச்சா படம் ஸ்லோன்னு சொல்றாங்க… மக்கள் ஒவ்வொருத்தர்கிட்ட ஒரு இருந்தும் ஒரு ஜானர்ல படம் எதிர்பார்க்குறாங்க” எனக் கூறி, கஸ்டடி படத்தின் தோல்வியைப் பற்றி மறைமுகமாக பேசியுள்ளார்.