வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 2 செப்டம்பர் 2024 (15:35 IST)

ரஜினி, தனுஷ்க்காக எழுதியதா ‘கோட்’ திரைப்படத்தின் கதை… இயக்குனர் வெங்கட்பிரபு பகிர்ந்த தகவல்!

வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் விஜய்யின் GOAT திரைப்படம் இன்னும் 3 தினங்களில் வெளியாக இருக்கும் நிலையில் தற்போது விறுவிறுப்பாக பரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். யுவன் இசையமைக்க சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படம் இன்னும் 3 தினங்களில் ரிலீஸாக உள்ள நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் முன்பதிவு தொடங்கியது. விஜய் படத்தை முதல் நாள் பார்க்க விஜய் ரசிகர்கள் ஆர்வமாக இருப்பார்கள் என்ற காரணத்தால் பல திரையரங்குகளும் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு டிக்கெட்டை விற்பனை செய்து வருகின்றனர். அதுவும் டிக்கெட் விலையை அதிகாரப்பூர்வமாக அறிவித்து ஆன்லைனிலேயே விற்பனை நடக்கிறது.

இந்நிலையில் படம் சம்மந்தமாக ஒரு நேர்காணலில் பேசும் இயக்குனர் வெங்கட்பிரபு பகிர்ந்த தகவல் கவனம் பெற்றுள்ளது. அதில் “கோட் திரைப்படத்தின் கதையை முதலில் ரஜினி மற்றும் தனுஷ் ஆகிய இருவரை மனதில் வைத்துதான் எழுதினேன்” எனக் கூறியுள்ளார்.