வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 13 டிசம்பர் 2017 (10:56 IST)

வெங்கட்பிரபுவின் பார்ட்டி படத்தின் டீசர் வெளியீடு

சென்னை 28 படத்தின் 2-ம் பாகத்துக்குப் பின்னர் வெங்கட்பிரபு இயக்கும் படம் பார்ட்டி. இதில் சத்யராஜ், நாசர், ஜெயராம், ரம்யா  கிருஷ்ணன், ஜெய், சிவா, ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ் என பெரிய நட்சத்திரப் பட்டாளத்தோடு பார்ட்டிக்காகக்  களமிறங்கியிருக்கிறார் வெங்கட்பிரபு. படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் கிளாமர் என்ற விஷயத்தை தவிர்க்கவே முடியாது. முதல் இரண்டு படங்களில் ஹோம்லியாக நடித்த மதுரை  பொண்ணு நிவேதா பெத்துராஜ், ஒருநாள் கூத்து, பொதுவாக என் மனசு தங்கம் ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.
 
தற்போது இவர் நடிப்பில் அடுத்து டிக் டிக் டிக், பார்ட்டி ஆகிய படங்கள் வரவுள்ளது, இதில் பார்ட்டி படத்தின் டீசரில் இவரின் கிளாமர் பார்த்து ரசிகர்கள் ஷாக்கில் உள்ளனர். அதை நீங்களும் பார்க்க வேண்டுமா....