செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 11 டிசம்பர் 2017 (22:36 IST)

இணையத்தில் வைரலாகும் நடிகை அஞ்சலியின் பெட்ரூம் வீடியோ

ஜெய், அஞ்சலி நடிப்பில் சினிஷ் இயக்கியுள்ள 'பலூன் திரைப்படம் வரும் 29ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில் இந்த படத்தின் புதிய டீசர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

இந்த டீசர் அஞ்சலியின் பெட்ரூமில் நடைபெறும் சம்பவங்களை கொண்டுள்ளது. அஞ்சலி படுக்கையில் அயர்ந்து தூங்கி கொண்டிருக்கின்றார். அப்போது அவரது பெட்ரூமில் உள்ள சேர் தானாக நகர்கிறது. அதன் பின்னர் அஞ்சலி போர்த்தியிருக்கும் போர்வையும் தானாக விலகுகிறது.

அப்போது ஒரு உருவம் மெல்ல நகர்ந்து போகிறது. அப்போது திடீரென பேய் கேமிரா முன் தோன்றி மறைகிறது. அந்த சமயத்தில் யுவனின் அதிரடி இசை பார்ப்போரை திடுக்கிட வைக்கின்றது.

இந்த டீசர் வீடியோ இணையதளங்களில் பெரும் வரவேற்பை பெற்று வைரலாக பரவி வருகிறது.